அவர் வீட்டில் மட்டும் சோதனை நடத்த வேண்டாம்.!! உத்தரவிட்ட மேலிடம்.!! அம்பலமான ரகசியம்.!!!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

சில இடங்களில் இன்றும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது.

5 வது நாளாக நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சோதனையில், பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், மற்றும் சட்ட விரோத பரிவர்த்தனை சம்மந்தமான ஆவணங்கள் அனைத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த சோதனை நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

அளவிற்கு அதிகமான சொத்து குவிப்பு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனை சம்மந்தமான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் எதிர்பார்த்தபடி, அவர்கள் அனைவரும் சிக்கியுள்ளனர்.

சோதனைப் பட்டியலில், சசிகலா குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை பார்த்து வரும் சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரின் பெயரும் இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் அவரிடம் தற்போது சோதனை நடத்த வேண்டாம் என்ற வாய்மொழி உத்தரவால், அங்கு சோதனை நடத்தப்படவில்லை.

ஆனால், அந்த எம்.எல்.ஏ-வின் வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது.

அதனோடு, சசிகலாவிற்கு நெருக்கமான தென்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வீட்டிலும் சோதனை நடத்தவில்லை.

large_002re658w-1903தற்போது அந்த அமைச்சர் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.

சசிகலா குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்புடைய நபர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது.

விரைவில் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.