விவேக் கையில் உள்ள விபரீதம்..? பீதியில் உறைந்த அதிமுக வட்டாரம்..!!

ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் வீட்டில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது

வருமான வரித்துறையினர் சோதனையில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்டோர் தொடர்பான ஏராளமான சொத்துகளின் ஆவணங்களும், முதலீடுகளின் முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் அதிகளவில் சிக்கியது.

அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடு,அலுவலகங்களில் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்களின் ஆவணங்கள் நிறைய சிக்கியுள்ளது.

ஜெயலலிதா தொடர்புடைய ஆவணங்கள், நிறுவனங்கள், சொத்துகள் பற்றிய தகவல் கிடைத்ததாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் இளவரசியின் மகனும், ஜெயா டிவி இயக்குநருமான விவேக்கின் வீடு, அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது மன்னார்குடி வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

விவேக், கிருஷ்ணப்ரியா, சிவக்குமார், வெங்கடேஷ், திவாகரனிடம் சொத்துகள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் விசாரித்துள்ளனர்.

தற்போது சோதனை முடிந்துள்ள நிலையில், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

மேலும் விவேக்-ஐ வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா இரகசியம் குறித்த ஆவணங்களும், வீடியோவும் விவேக் கையில் இருப்பதால், அடுத்து நிகழப்போகும் விபரீதத்தை எண்ணி பீதியில் உறைந்துள்ளது அதிமுக வட்டாரம்.