புங்குடுதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு முதற் கட்ட நடவடிக்கையாக மிகவும் பயன் தர வல்ல மரக்கன்றுகள் சுவிஸ் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த சமூக அக்கறையுள்ள சிலரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக, ஊரதீவு, கேரதீவு, மடத்துவெளிவாழ் மக்களுக்கு இக்கன்றுகள் வழங்கப்பட்டதாகவும்-மக்கள் மிகவும் சந்தோசமாகவும் ஊக்கத்துடனும் மரக்கன்றுகளைப் பெற்றுச் செல்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளான….
திரு சுப்பிரமணியம் சண்முகம்
திரு கந்தையா கணேசராசா, ஆகியோரின் அனுசரணையிலேயே இப்பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக மேலும் அறிய முடிகின்றது.