நாடே ஸ்தம்பிக்கப் போகிறது…சிறைகள் எல்லாம் நிரம்பி வழியப்போகிறது : அரசு ஊழியர் அதிரடி முடிவு..!!

நாடே ஸ்தம்பிக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் சிறை நிரப்பு போராட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடத்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும், வங்கி, ஆயுள் காப்பீடு, தொலைத்தொடர்பு உட்பட பல்வேறு துறைகளைச் தொழிற்சங்கங்கள் நவம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், எப்போதும் போல இந்த போராட்டத்தையும் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அரசு ஊழியர் சங்கங்கள் அடுத்து என்ன செய்வது என்று கூடி ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதில், வரும் ஜனவரி மாதம் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், கைது செய்தால் சிறை நிரப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த போராட்டமானது, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில், அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் ஈடுபடவுள்ளதாகவும், போராட்டம் நடத்தப்படும் தேதி எப்போது என்று ஆலோசனை முடிவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

201702010217439785_Bank-employees-are-on-strike-which-took-place-on-7-and-28_SECVPF