கோலாலம்பூர்: இலங்கை அண்டர் 19 அணியை சேர்ந்த கெவின் கொத்திக்கொடா என்ற பவுலர் மிகவும் வித்தியாசமாக பந்து வீசுவதால் வைரல் ஆகி இருக்கிறார்.
இவர் பந்து வீசும் போது மொத்த உடலையும் தலைகீழாக திருப்பி உடலை வளைத்து பந்தை எறிகிறார். மலேசியாவில் அண்டர் 19 ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விளையாடும் இலங்கை அணி வீரர் ஒருவர் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஸ்டைலால் பேமஸ் ஆகி இருக்கிறார்.
கெவின் கொத்திக்கொடா என்ற இந்த வீரர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ஆவர். இந்த சீரிசில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தனது உடலை தலைகீழாக திருப்பி போடும் பவுலிங் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
இது மிகவும் கடினமா பந்து வீசும் முறையாகும். அவர் இப்படி பந்து வீசும் போது பேட்ஸ்மேனை ஒரு நொடி கூட பார்க்க மாட்டார். இதனால் பேட்ஸ்மேன்கள் அவரது பந்தை பிடிக்க முடியாமல் குழம்பிப் போய் இருக்கின்றனர்.
இது குறித்து கெவின் கூறும் போது ”இது நானாக யாரும் பயிற்சி அளிக்காமல் கற்றுக் கொண்ட ஸ்டைல். முதலில் இப்படி வீச கஷ்டமாக இருந்தது. இப்போது இதுதான் வசதியாக இருக்கிறது.” எஎன்றார்.
இவரது பவுலிங் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் பால் ஆடம்ஸின் பவுலிங் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.