பிரபல பின்னணி பாடகி ராதிகா மாரடைப்பால் மரணம்!

பிரபல தென்னிந்திய திரைப்பட பாடகி ராதிகா மாரடைப்பால் காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் ராதிகா(வயது 47).

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர் மணி சர்மா கூறுகையில், என் இசையில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களில் ராதிகா பாடியுள்ளார்.

அவரின் மறைவு வருத்தமளிக்கிறது, ராதிகாவின் குடும்பம் இந்த வலியிலிருந்து வெளிவர கடவுளை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

திருப்பதியில் பிறந்த ராதிகா கடந்த 2014-லிருந்து சென்னையில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)