பிரபுதேவா – நிக்கி கல்ராணிக்கு திருப்பதியில் திருமணம்!

1509890075-9155

பார்ட்டி படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் அடுத்த படம் ‘சார்லி சாப்ளின்-2’.

கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார்.

அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். இப்படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறும் போது,


பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும், அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே  `சார்லி சாப்ளின்-2′.  திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று தயாரிப்பாளா் டி.சிவா கூறினார்.

படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.