லெபனானிய பிரதமர் சாத் ஹரிரி தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் முகமாக எதிர்வரும் தினங்களில் தனது தாய்நாட்டிற்கு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சவூதி அரேபிய றியாத் நகரிலிருந்து பியூச்சர் தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்படி அறிவிப்பைச் செய்துள்ளார்.
சாத் ஹரிரி சவூதி அரேபியாவால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக லெபனானிய அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
ஈரானிய ஆதரவு ஹிஸ்புல்லாஹ் அமைப்பே தனது பதவி விலகலுக்கு காரணம் எனவும் தனதும் தனது குடும்பத்தினரதும் உயிர் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே தான் பதவி விலகுவதாகவும் அவர் கூறினார்.
“நான் பதவி விலகியுள்ளேன். நான் லெபனானுக்கு விரைவில் சென்று அந்நாட்டு அரசியலமைப்பிற்கு இணங்க எனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
சுன்னி இனத் தலைவரும் வர்த்தகப் பிரமுகருமான சாத் ஹரிரி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமராக நியமனம் பெற்றிருந்தார். அவ ரது தந்தையான ரபீக் ஹரிரி 2005 ஆம் ஆண்டு கார் குண்டுத் தாக் குதலில் கொல்லப்பட்டிருந்தார்.