கண்டி – கொழும்பு வீதி மாவனெல்லை – கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனேதென்ன – கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.