வெள்ளித்திரை என்ன தான் வளர்ந்தாலும், மக்கள் மத்தியில் சின்னத்திரை மீதுள்ள ஈர்ப்பை தவிர்க்கமுடியாது. அதிலும் சீரியல்களால் தான் இன்று பல தொலைக்காட்சி வெற்றிக்கரமான ரன் ஆகின்றது.
அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் வாணி ராணி சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர், 1000 எபிசோட்ஸ் தாண்டி வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் இந்த சீரியல் இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடியவிருப்பதாக இந்த சீரியலின் நாயகி ராதிகாவே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இவை அந்த சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.