இலட்சம் கோடி இரகசியமாய் போனதா..? இந்திய அரசியலில் இமாலய பிரளயம்!

பிரபல தனியார் தொலைக் காட்சியில், தினகரன் அணியைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் இன்பத்தமிழனைப் பேட்டி எடுத்தனர். பேட்டியும் ரொம்ப கேசுவலாக, சாலையில் நடந்து கொண்டே பேசுவது போன்ற பாணியில் அமைந்திருந்தது. தமிழ்நாடே பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும், சசிகலா குடும்பத்தினர் மீதான ரெய்டு பற்றித் தான் பேட்டி நடந்து கொண்டிருந்தது.

அவர்களும் நடந்து கொண்டிருந்தார்கள். அதில், இன்பத்தமிழனிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர் ரொம்ப கூலாக பதில் அளித்த விதமும், அவரது பாடி லாங்குவேஜ் என்ற உடல் மொழியும், அவரது பாவனைகளும், சினிமா நடிகர்கள் கெட்டார்கள் போங்கள்!

picஅதிலும், இவர் இப்போதுள்ள முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு போட்டியாக வந்து விடுவார் போல இருக்கிறது. இவர் அரசியலை விட்டு நடிக்க வந்தால், பெரிய அளவிலான நகைச்சுவை நடிகராகப் பேசப் படுவார் என்று பார்த்தவர்கள் சொன்ன கருத்துக்கள் தான் ஹைலைட்டான விஷயம்!

“தமிழ்நாடு முழுக்க தொடர்ந்து நாலு நாளா, 187 இடங்களிலே சோதனை போட்டு, 1000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்திற்கான ஆவணங்களைக் கைப்பத்தியிருக்காங்க, வருமானவரித் துறையினர். கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கைப்பத்தியிருக்காங்களே”

இதைப் பத்தி உங்க கருத்தென்ன என்ற கேள்வி கேட்டவுடன், இன்பத்தமிழன், “என்னங்க நீங்க இப்படிச் சொல்றீங்க….கோடியை எங்கே தேடினாங்க…சி.டி. யை இல்லை தேடிக்கிட்டுக்காங்க… என்று சொன்னவுடன் கேள்வி கேட்டவரே, ஒரு மாதிரியாகிப் போனார்.

“என்னது சி.டி.யா..? என அவர் திருப்பிக் கேட்க, “ஆமாங்க, உங்களுக்குத் தெரியாதா? ஆம்மா அஸ்பத்திரியிலே இருந்த போது எடுத்த வீடியோ சி.டி.யிலே இருக்கு… அதைத்தான் இப்படி வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறாங்க….! என்று சொன்னாரே பாருங்க!

தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். “அந்த சிடியிலே அப்படி என்னங்க இருக்கு? அதுக்கு எதுக்காக வருமானவரித்துறை 187 இடத்திலே சோதனை போடனும்..? என்று கேள்வி அவரிடம் மீண்டும் கேட்கப் பட்டது.

அந்த சிடியைத் தானே மோடி தேடிக்கிட்டிருக்காரு!. எங்க கிட்டே கேட்டாப்லே! நாங்க இல்லேன்னு சொன்னோம். அதைக் குடுத்தே தீரனும்னு மிரட்டினாரு! ஆனா, அதுக்கு, நாங்க மசியலே, அதனாலே தான் இப்படி ரெய்டு பண்ணி சிடியைத் தேடராறுங்க….! என மறுபடியும் வடிவேலு பாணியில் சொல்ல, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலி தாங்க முடியாமல், விடாமல் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள்.

“அப்ப சசிகலா குடும்பத்திலே இருக்கிறவங்க, எல்லாமே, இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை, கஷ்டப்பட்டு தொழில் செஞ்சு சம்பாதிச்சாங்களா? என்று கேட்டதும், சொன்னாரு பாருங்க ஒரு அதிரடி பதிலை!

“ஆமா சார்! ஒரு டீக்கடை வச்சிருக்கிறவரு, கொஞ்ச நாள்லே, அப்படியே முன்னேறி ஒரு ஓட்டலைக் கட்டுறது இல்லையா…அது மாதிரி தாங்க…” என்று சொன்னதும், கேள்வி கேட்டவரும், இன்பத்தமிழனுக்க ஏற்றவாறு, விடாக்கண்டனாக, “ ஆனா சசிகலா வச்சிருந்தது, டீக்கடை இல்லீங்களே…கேசட்டு கடை தானே வச்சிருந்தாங்க.

அதிலேயிருந்தா, இந்தனை ஆயிரம் கோடி ரூபா சொத்து சேர்கக் முடியும்?”-னு கேட்க, “அட ஆமாங்க… நடராஜன’ அப்போ பி.ஆர்.ஓ-வா இருந்தாரில்லே, அப்போ லோன் போட்டு, தந்த பணத்திலே தொழிலை நல்லபடியா நடத்தி படிப்படியா முன்னுக்கு வந்திருக்காங்க…”
இதைக் கேட்டதும், ஏண்டா, இவருகிட்டே போயி கேட்டோமே-ன்னு நொந்து போயிட்டாரு மனுஷன்.

அது மட்டுமல்ல. “எங்க கிட்டே ஏதுங்க பணம், எல்லாம்…? எடப்பாடி கிட்டேயும், ஓ.பி.எஸ். கிட்டேயும், லட்சக் கணக்கான கோடி ரூபாயும் சொத்தும் இருக்கு. ஏன் அவங்க வீட்டிலே ரெய்டு பண்ண வேண்டியது தானே… என்று சகட்டு மேனிக்கு, மதுரை பாஷையில், ஒரு பிட்டைப் போட்டு விட்டார்.

என்ன கேள்வி கேட்டாலும், இன்பத்தமிழன், வடிவேலு ஒரு படத்தில் பஞ்சாயத்தில், “கையைப் பிடிச்சு இழுத்தியாடா…எனக் கேட்டவுடன், “என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா..” என்று சொல்லிக் கொண்டே போவார்.

அது போலத் தான் முன்னால் அமைச்சர் இன்பத்தமிழனின் பேட்டியும் இருந்தது. இவ்வளவு களேபரத்திலும,; இப்படி நையாண்டியா பேசிய இன்பத் தமிழனின் பேட்டி, வழக்கமான சினிமா காமெடி போல, மக்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது. எப்படி இருந்த அரசியல், எப்படி மாறிடுச்சு பாத்தீங்களா…!