விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா

மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.

இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது.

இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தனது அசாத்திய நடிப்பால் நடிகை நயன்தாரா மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-and-nayanthara