இளம் கோடீஸ்வர வர்த்தகர் தற்கொலை……

அத்துருகிரிய, கஹன்தொட்ட, அலுபோவத்த பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

அதில், கடன் சுமை தாங்க முடியாமல் தான் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நபர்  அத்துருகிரியவில் குழந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திவந்தவர் என்றும் 38 வயதாகும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1468560650-9831