பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார கல்வியமைச்சுக்கு உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.
பரீட்சை வினாத்தாள்கள் குறித்து நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையிலேயே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடமையில் அலட்சியம் மற்றும் தவறான வழிநடத்தல்கள் என்பனவற்றைக் காரணம் காட்டி இரகசியத் தகவல்கள் பிரிவின் தலைவரான பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே இந்த இடமாற்றம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பரீட்சைகளுக்கான வினாத்தாள் அமைப்பு, விடைத்தாள் திருத்தம், புள்ளியிடல் மற்றும் பரீட்சைகளின் இரகசியத் தன்மை காப்பு என்பன குறித்த விசாரணைகள் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பணிப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.