உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த தகவலை கமல் ஹாசன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று உறுதி செய்தார்.
அதைத்தொடர்ந்து, அந்த படம் குறித்து எந்த விவரமும் வர வில்லை. அதன் பிறகு தற்போது தான் படத்தை பத்தின ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் 2018ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படத்தின் வேலைகளை முடிக்க பிளான் செய்துள்ளார்களாம். ஒரு வருடத்திற்குள் நண்பன் படத்தை தவிர வேறு எந்த படமும் இயக்குனர் ஷங்கர் 1 வருடத்திற்குள் முடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.