ஜனவரி 1ல் காத்திருக்கும் அதிர்ச்சி..?150 வருட மரபை அடியோடு மாற்றப்போகும் நிகழ்வு..?

150 வருடமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு காலம், தற்போது ஜனவரி-டிசம்பர் என மாற்றப்பட உள்ளது.

இந்திய நிதி ஆணையம் (Finance Commission of India) 1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280ஆம் பிரிவின்படி குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது.

mariocash5410நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான நிதிப் பகிர்தலை வரையறுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

1951ஆம் ஆண்டின் நிதி ஆணையச் சட்டம் இவ்வமைப்பின் உறுப்பினர்களின் தகுதிகள், நியமித்தல் வரன்முறை,பதவிக்காலம் மற்றும் அதிகாரங்களை வரையறுத்துள்ளது.

அரசியலமைப்பின்படி ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்ட நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் மாறுதல்களுக்கேற்ப பல்வேறு நிதி ஆணையங்களின் பரிந்துரைகளும் பெரிதும் வேறுபட்டுள்ளன. இதுவரை பதின்மூன்று நிதி ஆணையங்கள் தங்கள் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளன.

தற்போது இருப்பது பதினான்காவது நிதி ஆணையம். வழக்கமாக இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடையும்.

ஆனால் இந்த வருடத்தில் இருந்து ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

2018-2019 ஆண்டிற்கான பட்ஜெட் இந்த மாதம் வெளியாகும் என மத்திய அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிதி ஆண்டு காலத்தை மாற்றியமைக்க அரசு வேலை செய்து வருகிறது.

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் டிசம்பர் மாதத்திற்கு முன்பே நடைபெற உள்ளது. இதனால் பட்ஜெட் குறித்து முழு விவரங்கள் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் குறித்து முடிவெடுக்க இரண்டு மாதம் கால தேவை என்பதால் நவம்பர் மாதம் முதல் வாரத்திலே பட்ஜெட் கூட்டத் தொடர் தொங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அண்மையில் நடைபெற்ற ஐஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கான வரி குறைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நிதியாண்டு, தேசிய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை ஒப்பிடாமல் மற்றும் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரைக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இந்தியாவில் நிதியாண்டு காலம் ஜனவரி- டிசம்பர் என முதலில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.