சற்று முன்னர் கோண்டாவிலில் உள்ள உணவகத்தில் வாள்வெட்டு சம்பவம்
கோண்டாவில் டிப்போச் சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு இரவு 8.30 மணியளவில் வந்த வாள்வெட்டுக் குழுவினர் அந்தக் கடையை அடித்து உடைத்துச் சேதமாக்கினர்.
உணவு உண்பதற்கு கடைக்குச் சென்றவர்கள் அவர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். கைக் கோடரி, மற்றும் வாள்களுடன் கடையினுள் சென்ற கும்பல் அங்கு பணியில் இருந்த ஒருவரை வாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது