அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம் – கலிபோர்னியாவில் 4 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவில், ராஞ்சோ டெஹாமா பகுதியிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம் - கலிபோர்னியாவில் 4 பேர் பலி

குறித்த பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தர்க்கத்தினையடுத்தே, குறித்த நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் அப்பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலைக்கு சென்று கண்மூடித் தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல் அறிந்து விரைந்த பொலிசார், தாக்குதல்தாரியை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் இந்த துப்பாக்கி கலாச்சாரத்தினால் அதிக உயிரழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம் - கலிபோர்னியாவில் 4 பேர் பலி