வடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்ததைகளை நடத்துவதினால் எந்த வித பயனுமில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
வடகொரியா தொடர் அணுவாயுத பரிசோதனைகளை நிறுத்தாமல் மேற்கொண்டு வருவதினையடுத்தே ஜப்பான் பிரதமர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போ அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த மாநாட்டில், சர்வதேச தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அபே, ஆணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணை தொழிநுட்பங்களில் வடகொரியா மிகச் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மத்தியில், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், எந்தப் பயனும் இல்லை என குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடகொரியாவின் கறித்த செயற்பாடகளால், சமாதான பேச்சுவார்ததையில் நம்பிக்கையின்மையை தமக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.