ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ நான் தயார் – கனடா பிரதமர்

மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதை கண்டித்தும் அவர்களுக்கு தான் உதவ தயார் என கனடா நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

1000x563_355948

மியான்மர் நாட்டில் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், ராணுவ அடக்கு முறைக்கும், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு பல நாட்டு தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்ததோடு, ஐநா சபையும் இந்த தாக்குதலை நிறுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்னைக்கு தீர்வு காண தான் தயாராக இருப்பதாகவும், மியான்மர், வங்கதேச அரசுடன் இணைந்து உதவ கனடா அரசும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.