நடிகை அமலாபால் வரி செலுத்த மறுத்த நிலையில் மீண்டும் பிரச்னை!

1_04342

கேரளாவில் காருக்கு வரி செலுத்த மறுத்த நடிகை அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்ய உத்திரவிடப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விரைவில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்க உள்ளனர். காருக்கு வரி ஏய்ப்பு தொடர்பாக நடிகர் ஃபகத் ஃபாசில் கேரளாவில் வரி செலுத்த சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார். அதுபோல நடிகர் சுரேஷ்கோபி தனது காரை பாண்டிச்சேரியில் பதிவு செய்தது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகை அமலாபால் வரி செலுத்த மறுத்த நிலையில் மீண்டும் பிரச்னை கிளம்பியுள்ளது.