நேற்று காலை 119 என்ற பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு காரணமாக மாத்தறை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஒன்றரை மணித்தியாலம் ஸ்தம்பிதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தை நோக்கி அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியொன்றை கொண்டு வந்துள்ளதாக குறித்த அவசர அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த அவசர நிலைமையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு அனைவரையும் கடும் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் எந்தவொரு துப்பாக்கியோ, வெடிபொருட்களோ மீட்கப்படவில்லை.
எனினும், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரிடம் இருந்து பாக்குவெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பின்னர் நீதிமன்றத்தின் வழமையான செயற்பாடுகள் இடம்பெற்றன.