இராமேஸ்வரம் மீனவர்களின் ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் இரத்து!

அறிவித்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பதினெட்டாம் திகதி நடக்கவிருந்த வேலைநிறுத்தமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவர் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (17) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

indian fishermenஎனினும், மேற்படி சம்பவம் குறித்து இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததுடன் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்று உறுதியளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களை மருத்துவமனைகளுக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தமது செயலுக்கு பாதிக்கப்பட்ட மீனவர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தையும் வேலைநிறுத்தத்தையும் கைவிட்டுவிட்டதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.