தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய கடலோர காவல்படையினர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள், கடலுக்கு சென்ற பொழுது இந்தியில் பேச சொல்லி இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் மீனவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்திய கடலோர படையினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் இதில் சம்மந்தப்பட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய கடற்படையினர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.