கிரேக்கத்தில் பெருவெள்ளம்!

கிரேக்கத்தில் பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துப் பேர் உயிரிழந்தனர். இந்த வெள்ளத்தில் தொழிற்சாலை நகரங்களான மாண்ட்ரா, நீ பெராமோஸ், மெகாரா ஆகியனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உயிரிழந்த பத்துப் பேரில் பெரும்பாலானோர் வயதானவர்கள். வீட்டினுள் புகுந்த வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துத் தப்பிக்க முடியாத நிலையில், வீட்டினுள்ளேயே இறந்த நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பத்துப் பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, இன்னும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எங்கும் தண்ணீரே சூழ்ந்திருப்பதால், காணாமல் போயுள்ளவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

03-1464952456-flood-france3-600