யோகாசனத்தை ஏற்றுக்கொண்ட சவூதி!

யோகாசனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி முறையாகும். இதில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகளை கருதி  சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர்.

ஆனால் சவுதி அரேபியா அரசு யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்தது.

இந்தியபிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று  ஜூன் மாதம் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சவுதி அரசு நேற்று யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. விளையாட்டின் ஒரு அங்கமாக யோகாவை அங்கீகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் யோகாவிற்கு ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும் என வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Captureddx