கோழியைக் ‘கெடுத்து’ கொலை செய்த சிறுவன்!

பாகிஸ்தானில் கோழியை ‘பாலியல் துஷ்பிரயோகம்’ செய்த பதினான்கு வயதுச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

ஹஃபீஸாபாத் என்ற ஊரில், கடந்த பதினோராம் திகதி பொலிஸில் வித்தியாசமான முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

மன்சாப் அலி என்பவர், தனக்குச் சொந்தமான கோழியொன்றை தனது அயல்வீட்டுக்காரரின் மகன் ஹுஸைன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதனால் கோழி செத்துப்போனதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்ணால் கண்டதாக இரண்டு சாட்சிகளையும் அவர் முன்னிறுத்தியிருந்தார்.

இதையடுத்து ஹுசைன் என்ற பதினான்கு வயதுச் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், பாலியல் உந்துதலிலேயே தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்தான்.

கோழியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஹுசைனின் குற்றம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது ஹுசைன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Evening-Tamil-News-Paper_96727716923