ஐம்பது இலத்திரனியல் பேருந்துகள் பெப்ரவரி மாதம் இறக்குமதி !

கடந்த 9ம் திகதி முன்வைக்கப்பட்ட,  வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய 50 இலத்திரனியல் பேருந்துகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறக்குமதி செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஐம்பது இலத்திரனியல்  பேருந்துகள் பெப்ரவரி மாதம் இறக்குமதி !

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் சேவையில் அமர்த்துவது என்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும்  இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் அத்தியட்சகர் ரி.எச்.ஆர். சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, விரைவாக பேருந்துகளை இறக்குமதி செய்து, அவற்றை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் சேவையில் அமர்த்த  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.