மழையால் லக்மல் புயலில் இருந்து தப்பிய இந்திய அணி… சுருண்ட கோலி

மழையால் லக்மல் புயலில் இருந்து தப்பிய இந்திய அணி… சுருண்ட கோலி

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முன்னதாக இன்றைய ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டமான இன்று டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிக்கர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினார்.

லக்மல் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பருக்கு கெட்ச் கொடுத்து வெளியேறினார் லோகேஷ் ராகுல். இதனை தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய லக்மல் அடுத்தடுத்து ஷிக்கர் தவான், மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் மழை குறுக்கீட்டதன் காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.