புகழ் பெற்ற ஓவியரான லியார்னடோ டாவின்சியால் வரையப்பட்டதாக நம்பப்படும் யேசுநாதரின் ஓவியம் சுமார் 450 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற ஏலமென்றின் போதே இந்த வரலாற்று சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சியினால் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
’சல்வேட்டர் முன்டி’ (salvator mundi) என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் இயேசுவின் உருவத்தைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம், ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450 தசம் 3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அகில உலகத்தில் அதிக பணத்திற்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற சாதனையை குறித்த ஓவியம் படைத்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு 179 தசம் 4 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்ட பிகாசோவின் ‘த வுமன் ஒஃப் அல்ஜேரிஸ்’ ஓவியத்தின் சாதனையை முறியடித்து இந்த ஓவியம் உலக சாதனைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.