ஒரே பாலின திருமணங்களை, சட்டபூர்வமாக்கியது அவுஸ்திரேலியா..!

அவுஸ்திரேலியா நாட்டில் ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
625.0.560.350.160.300.053.800.668.160.90
இந்த வரலாற்று சிறப்புமிக்கக் கருத்துக் கணிப்பில் தபால் ஓட்டுகளில் 61.6% மக்கள் ஒரு பாலுறவு திருமணங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது அரசு பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை இயற்ற உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
முடிவுகள் அறிவித்த பிறகு பேசிய டர்ன்புல் “இது குறித்து பேசி வந்த லட்சக்கணக்கான அவுஸ்திரேலியர்கள்  தற்போது திருமண சமத்துவத்துக்கு மிகப் பெரிய அளவில் வாக்களித்துள்ளனர்” என்றார்.
தற்போது வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளால் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடிய ஒரே பாலின ஆதரவாளர்கள் இதன் வெற்றியை  ஒரே பாலுறவு ஆதரவாளர்கள் பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும் ஆடி பாடியும் கொண்டாடி வருகின்றனர்.