யாழ். போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வளலாய் கிழக்கு அச்சுவேலி பகுதியினை சேர்ந்த 25 வயதான கஜரூபன் பிரசாந்தினி என்ற இளம் தாயே குழந்தை பிரசவித்த சில நாட்களின் பின் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பெண்ணுக்கு கடந்த 10ம் திகதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 12ம் திகதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் ,சில மணி நேரங்களின் பின் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் தாய் நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் ,யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.