தொடர்ச்சியாக வேலைசெய்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்மணி!!

தற்போது உள்ள சூழ்நிலைகளில் ஒரு கம்பெனி விட்டு மற்றொரு கம்பெனி மாறுவதையே ஊழியர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

குறைந்தபட்சம் ஒரு கம்பெனியில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது.பணிச்சுமை, ஊதியப்பிரச்சனை, மன அழுத்தம் போன்றவற்றிற்கு ஆளாகும் காரணத்தால், தங்களையும் புதுப்பித்துக்கொள்வதற்காக எந்த ஒரு கம்பெனியிலும் நிரந்தரமாக இருக்காமல், வேறு கம்பெனிக்கு ஊழியர்கள் இடம்பெயர்கிறார்கள்.

ஆனால், அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரே கம்பெனியில் 71 வருடங்கள் பணியாற்றியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள Sutter Health Alta Bates Summit Medical Center  – இல் கடந்த 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி Elena Griffing என்ற பெண்மணி வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது இவருக்கு வயது 20. தொடர்ந்து 71 வருடங்கள் அதே நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவருக்கு தற்போது 91 வயதாகிவிட்டது, இருப்பினும் அந்த நிறுவனத்தை விட்டு விலகி செல்ல மனமில்லாமல், அங்கேயே தான் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு, தனது பணியினை அதிகம் நேசிப்பதும் அனைத்து விடயங்களையும் புன்னகையோடு எதிர்கொள்வதுமே காரணம் என கூறியுள்ளார்.மேலும்  Elena Griffing கூறியதாவது எனக்கு 19 வயது இருக்கும்போது ஹீமோகுளோ பின் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தேன். சுமார் 4 மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதால் எனது உடல்நலம் குணமடைந்தது.

அப்போது, இந்த மருத்துவமனையில் பணியாற்றி Elena Griffing சரியாக பணிக்கு வராமல் இருக்கிறார் என அங்கு பணியாற்றிய ஊழியர்கள் புகார் தெரிவித்துக்கொண்டே இருந்தனர், இதனை அறிந்த நான், நான் உங்கள் மருத்துவமனையில் பணியாற்றலாமா என கேட்டேன்.

அப்போது நீ என்ன  Secretary  வேலை பார்க்கபோகிறாயா என்று என்னை கிண்டலாக கேட்ட மருத்துவமனை தலைமை அதிகாரி, எனக்கு வரவேற்பாளர் பணியை ஒதுக்கி கொடுத்தார்.அந்த பணியில் இருந்த நான் வருடங்கள் செல்ல, நோயாளிகளின் நோய்கள் தொடர்பான ரிப்போட்டுகளை தயாரிக்கும் பணியில் அமர்ந்தேன்.

வருடங்கள் சென்றது…. பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். இதன் காரணமாக எனக்கு அந்த மருத்துவமனையின் தூதுவர் பதவி கொடுக்கப்பட்டது. அந்த பதவியில் சிறிது காலம் இருந்த நான், தற்போது நோயாளிகளின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்( patient relations coordinator)71 வருடங்கள் பணியாற்றிவிட்டேனா என்பதை நினைக்கையில், ஒரே ஆச்சரியமாக இருக்கிறது.

இதுவரை எனது பணிக்காலத்தில் மன அழுத்தத்தால் நான் பாதிக்கப்பட்டது கிடையாது, சொல்லப்போனால் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு எனக்கு நேரமும் கிடையாது. அதனை நான் முற்றிலுமாக தவிர்த்து விடுவேன்அ,துமட்டுமின்றி துயரத்துடன் பணியாற்றுவதற்கும் நேரமில்லை, ஏனெனில் அதற்கேற்ற வகையில் சூழ்நிலைகளை நான் மாற்றியமைத்துக்கொள்வேன்.

தனது தொடர்பணிக்கான காரணமாக இவர் கூறுவது, நீங்கள் ஒவ்வொரு நாளும் பணியாற்றுகிறீர்கள், அதனால் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகளையும் நீங்கள் சந்தித்து அதற்கான தீர்வினை கண்டறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

தொடர்ந்து பணியாற்ற விரும்பும் இவர், அப்படி நான் இந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினால், ஒரு பெட்டியில் அடைத்துதான் என்னை கொண்டு செல்ல வேண்டும் என்று புன்னகையோடு கூறுகின்றார்.