வாள்வெட்டு சம்பவங்களின் எதிரொலி!! பொலிஸாரினது விடுமுறைகள் ரத்து!!

யாழ்ப்­பா­ணத்­தில் மீள­வும் அதி­க­ரித்­துள்ள வாள்­வெட்­டுக் கும்­பல்­க­ளின் அட்­டூ­ழி­யங்­க­ளை­ய­டுத்து அனைத்­துப் பொலி­ஸா­ரி­ன­தும் விடுப்­பு­க்கள் நேற்று இடை­நி­றுத்­தப்­பட்­டன.

இதற்­கான அறி­வு­றுத்­தலை வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர், யாழ்ப்­பாணப் பிராந்தியத்தில் உள்ள அனைத்­துப் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்­கும் நேற்­றுக் காலை வழங்­கி­னார்.

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளாக வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளும், அடா­வ­டித்­த­னங்­க­ளும் மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளன.

இந்த நிலை­யி­லேயே, பொலி­ஸா­ரின் விடு­மு­றை­கள் அனைத்­தை­யும் நேற்­றி­லி­ருந்து, மறு அறி­வித்­தல்­வரை இடை­நி­றுத்­து­மாறு, வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் அறி­வு­றுத்­தி­னார்.

Jaffna-DIG-05