தலைநகரின் அழகை 32வது மாடியிலிருந்து பார்த்து ரசித்த மைத்திரி!!

கொழும்பில் மிகவும் பிரமாண்டமான ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை திறந்து வைத்தார்.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேலும் அதிகரிக்கும் வகையில்  Shangri-La ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.ஹோட்டலை திறந்து வைத்த ஜனாதிபதி விசேட விருந்தினர்கள் புத்தகத்தில் கையொமிட்டுள்ளார்.

கையொப்பமிட்டவுடன் 32 மாடிக்கு சென்ற ஜனாதிபதி, அங்கிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஹோட்டலின் 32 மாடியில் இருந்து கொழும்பின் அழகை ஜனாதிபதி ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அத்துடன் Shangri-La  ஆசிய நிறுவனத்தின் தலைவர் Hui Kuok  என்பவரினால் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.