பியர் மீதான வரிக் குறைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

பியர் மீதான வரி குறைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதில் வடமாகாண சபை உறுப்பினர்கள், இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.