கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
மொபைல் பிரவுசர்களில் மிகவும் பிரபலமானது யூசி பிரவுசர். இது வேகமாகச் செயல்படும் என்பதால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் தவறாமல் இது இடம்பிடித்துவிடும். உலகின் முன்னணி சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அலிபாபா’ இதன் உரிமையாளராக இருந்து வந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 500 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டதாகச் சமீபத்தில் யூசி பிரவுசர் அறிவித்திருந்தது.