சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் பாம்பு!

சிறிலங்கா நாடாளுமன்றத்தின், முதலாவது இலக்க  குழு அறைக்குள் இருந்து பாம்பு ஒன்று நேற்று நாடாளுமன்றப் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தரைத்தளத்தில் உள்ள முதலாவது இலக்க குழு அறையில் நேற்றுக்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், அங்கு ஒளிந்திருந்த பாம்பு ஒன்றை கண்டுபிடித்து பிடித்துச் சென்றனர்.

18-1434612393-srilanka-parliament57பிடிக்கப்பட்ட பாம்பு, பூனைப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாம்பு கண்டுபிடிக்கப்பட்ட  குழு அறை பெரும்பாலும், அமைச்சர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளுக்குப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பல்வேறு பகுதிகளிலும், இதுபோன்ற பாம்புகள், முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், நாடாளுமன்ற பணியாளர்கள் சிலருக்கு அண்மையில் பாம்புகளைப் பிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.