ரெய்டு குறித்து தீபா ஆவேசம்!

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு நீதிபதியின் அனுமதி பெற்று ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனைக்கு தினகரன் தரப்பில் இருந்தும், அதிமுக தொண்டர்களிடம் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் போயஸ் இல்லத்தில் சோதனை என்ற செய்தியை கேள்விப்பட்டு அவருடைய அண்ணன் மகள் தீபா அங்கு விரைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ‘ `சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் இல்லம் இருக்கிறது. ரெய்டு குறித்து எனக்கு எந்தத் தகவலும் கூறவில்லை. செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன்.

போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியபடுத்தியிருக்க வேண்டும். ரெய்டுக்கு யார் பொறுப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் சகோதரர் தீபக்கிடமும் ரெய்டு குறித்து எந்த அனுமதியும் அதிகாரிகள் பெறவில்லை. என்னிடமும் அனுமதி பெறவில்லை.

சசிகலா குடும்பத்திடம் அனுமதி பெற்று இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. வேதா இல்லம் மற்றும் பூர்வீக சொத்து எங்களுக்குச் சொந்தமானது. அதை மீட்பது எனது கடமை. சசிகலா குடும்பத்தின் முழு ஒத்துழைப்போடுதான் இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது’ என்று கூறினார்._94834557_ec787176-dc09-4bd6-b9a8-862b316e3258