ஒரு அறை முழுக்க புதிய 2000 ரூபாய் கட்டுக்கள்… அதிகாரிகள் சிலர் தீவிர சோதனையில் இருக்கிறார்கள். நோட்டு மலைக்கு எதிரே நடிகர் விஷால் பதட்டத்துடன், “சார் விடுங்க சார்… இதெல்லாம் என் பணம்… போங்க சார்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எதிரில் உள்ள அதிகாரிகள் திகைத்தபடி, “என்ன சார்… எப்படி இவ்ளோ பணம் வந்துச்சி… கடன் வாங்கினதா சொல்றீங்க… இவ்ளோ பணம் இருக்கு.. என்ன ஆதாரம் சார்…” என்று கேட்கிறார்கள்.
உடனே விஷால், “எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சார்.., விடுங்க,” என்கிறார். அதுவரை அந்த வீடியோவைப் பார்த்தவர்கள், உண்மையிலேயே விஷால் அலுவலகத்தில் நடந்த ரெய்டு வீடியோதான் இது என்று நினைத்திருப்பார்கள். அடுத்த காட்சியில் சடாரென வருகிறார் நடிகர் அர்ஜுன்.
பணமா… யோவ், கட்டுக்குள்ள பாருங்கய்யா வெள்ளைப் பேப்பர்.. ரெய்டாவது ஒண்ணாவது.. ஷூட்டிங் டைம்ல… கிளம்புங்க,” என்கிறார் சிரித்தபடி. எல்லாம் இரும்புத் திரை படத்தின் ஷூட்டிங்கின் நடுவில் திட்டமிட்டு எடுக்கப்பட்ட தான் இது என்பது பின்னர்தான் தெரிந்தது. தன் வீட்டில் நடந்த ரெய்டை வைத்து விஷாலே எழுதிய ஸ்க்ரிப்டாம் இது.