கேப்பாபுலவு மக்களின் பூர்வீக நில மீட்பு போராட்டம் இன்றுடன் 262 ஆவது நாளை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி இடம்பெற்று வருகின்றது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாக மாதரிக்கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் தம்மை சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
எனினும் தாம் கடந்த ஒன்பது மாதங்களாக போராட்டத்தை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் தம்மை மீள்குடியேற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.