யாழில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை பிடிக்க சிறப்பு பொலிஸ் குழு!

யாழில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை பிடிக்க சிறப்பு பொலிஸ் குழு!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவரும் கும்பல்களைச் சேரந்தோரைக் கைது செய்ய யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும்  கும்பல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அந்தப் பொலிஸ் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.