விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் ஹெலிகாப்டருடன் மோதி விழுந்து, விபத்திற்குள்ளான சம்பவம், பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனின் மத்திய மாகாணமான, பக்கிங்ஹாம்ஸ்பயர் பகுதியில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் ஹெலிகாப்டருடன் பயங்கர சத்தத்துடன் மோதி, விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
வேடிஸ்டன் ஆலிஸ்பரி என்ற எஸ்டேட் பகுதியிலேயே, குறித்த விமானம் விழுந்து விபத்திற்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தேம்ஸ்வெய்லி பொலிசார், நடுவானில் மோதிய விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாகங்கள் கிடைத்ததை உறுதி செய்து, தீயணைப்பு குழுவினரிற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டதுதோடு, இந்த விபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.