புலிகள் மீள உருவாகவில்லை : பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ

நாடாளுமன்றில் தெரிவிக்கப்படுவது போன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் மீள உருவாகவில்லை என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

10491-1-f4bac50149d58c9befac9754bc4e9348

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில் …..

20 வயதுகொண்ட இளைஞர்களிடையே சிறு சிறு மோதல்களே இடம்பெறுகின்றது.அவையும் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவரப்படும்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் மீளவும் விடுதலைப் புலிகள் உருவாகிவிட்டனர் என நாடாளுமன்றில் சிலர் பேசுகின்றனர்.

அவ்வாறு ஒரு நிலமை யாழ்ப்பாணத்தில் இல்லை.20 வயது இளைஞர்கள் நாலைந்து பேர் மோதிக்கொள்கின்றனர்.

அவர்களில் பலர் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.வெளியில் உள்ளவர்கள் சிலர் இரு தரப்புகள் தங்களுக்கு இடையே மோதிக்கொள்கின்றனர்.

அவர்களின் நோக்கம் சிறைகளிலுள்ளவர்களின் மனநிலை மாறக்கூடாது என்பதேயாகும்.என மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.