மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களின் தேவை குறித்து பேசாமல், சட்டமன்ற கூட்டத்தையே கட் அடித்துவிட்டு திரைப்பட ஆடியோ விழா ஒன்றில் கலந்து கொண்டு நடிகைகளுடன் குத்தாட்டம் ஆடியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பரீஷ். இவர் நேற்று ஒரு கன்னட திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார். விழா ஆரம்பிக்கும் முன்னர் அந்த படத்தில் நடித்த நடிகையுடன் அவர் சில நிமிடங்கள் டான்ஸ் ஆடினார்.
அதே நேரத்தில் பெங்களூரில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ அம்பரீஷ் மீது கர்நாடக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.