இன்றைய ராசிபலன் (19.11.2017)

  • மேஷம்

    மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை கைக்கூடும். ஆடை, ஆபரணம் சேரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்
    உங்களைத் தேடி வருவார். விருந்தினர் களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • கன்னி

    கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உடல் நலம் சீராகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நிம்மதி கிட்டும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நெருங்கியவர்கள் சிலரால் தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவன மாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கி களை கறாராக பேசி வசூலிப்பீர்கள். அதிகம்
    உழைக்க வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.