வடக்கிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படாது – சரத் பொன்சேகா

வடக்கில் உள்ள முக்கிய இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்றும், சிறிலங்கா இராணுவத்தினர் அங்கே தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என்றும் சிறிலங்காவின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“வடக்கில் இருந்து இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படவுள்ளனர் என்று கூட்டு எதிரணியினர் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர்.

நாட்டின் தென்பகுதியில் உள்ளதைப் போன்றே, வடக்கு, கிழக்கிலும் சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பார்கள்.

போர் இப்போது முடிந்து விட்டதால், வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகள் கோருகின்றன.

ஆனால், தேசிய பாதுகாப்பு விடயங்களில் சிறிலங்கா அரசாங்கம் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

sarath-fonseka2