அடுத்த ஒரு ஆண்டிற்கு பொருளாதாரத்தில் மந்த நிலை நீடிக்கும் என இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கணித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட முன்னாள் பிரதமர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பத்திரிக்கையாளர்கள் பண மதிப்பிழப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பணமதிப்பிழப்பால் விவசாயிகளும் சிறு நிறுவனங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் பிரதமர், கறுப்புப் பணத்தை பணமதிப்பிழப்பால் கட்டுபடுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதாரம் மெதுவாக சகஜநிலைக்கு மாறும் என மக்கள் எதிர்பார்த்து வருவதாக குறிப்பிட்ட அவர், தன்னைப் பொறுத்தவரை அடுத்த ஒரு ஆண்டிற்கு பொருளாதாரத்தில் மந்த நிலை தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.