ரொஹிங்ய முஸ்லிம்களின் நெருக்கடியை தீர்க்க தயார் – சீனா அறிவிப்பு!

ரொஹிங்கியா முஸ்லிம்களின் நெருக்கடிகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளது.

பங்களாதேஷுக்கு விஜயத்தினை முன்னெடுத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரொஹிங்ய முஸ்லிம்களின் நெருக்கடியை தீர்க்க தயார் - சீனா அறிவிப்பு!

பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை முன்னெடுத்துள்ள வாங் யீ, நேற்றைய தினம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, ரோஹிங்கியா முஸ்லிம்களின் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, மியன்மாரில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கையில் பங்களாதேஷ் மற்றும் மியன்மார் அரசாங்கங்கள் ஈடுபட வேண்டுமெனவும் இரு நாடுகளின் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் ராக்கைன் பகுதியில் வசித்து வரும் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து வன்முறைகள் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதனால் பல இலட்சக்கணக்கானவர்கள் பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரொஹிங்ய முஸ்லிம்களின் நெருக்கடியை தீர்க்க தயார் - சீனா அறிவிப்பு!