தெற்கு அட்லாந்திக் கடற்பரப்பில் காணாமல் போன ஆர்ஜென்டின கடற்படையினருக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் நடுக்கடலில் காணாமல் போயிருந்தது.
அத்துடன் கப்பலின் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது குறித்த கப்பலிலிருந்து நேற்றைய தினம் சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அத்துடன் 7 செய்மதி தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த கப்பல் இருக்கும் சரியான இடத்தை மீட்புப்பணியாளர்கள் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.